Sunday, March 27, 2016

Stone Labyrinth at Baire Gauni near ChinnaKottur (Kundani)-Tamil Nadu




A surviving example beside the Baire Gauni resevoir, near the ruined town of Kundani in Tamil Nadu, is of the Chakra-vyuha design, 8.5 metres in diameter and formed with lines of stones embedded in the ground (Kürvers, 2006)

From the World-wide Labyrinth Locator: "The stone labyrinth at Baire Gauni, near Chinnakottur in Tamil Nadu, India, is laid out in the Chakra-vyuha style commonly encountered throughout India."

Classical - Chakra-vyuha type (also known as Hecate)
An unusual development of the classical labyrinth, found primarily in India, is based on a three-fold, rather than four-fold seed pattern and is often drawn with a spiral at the centre. It is referred to in Indian tradition as Chakra-vyuha, a name derived from a magical troop formation employed by the magician Drona at the battle of Kurukshetra, as recounted in the Mahabharata epic.




பைரே கவுணி (Stone labyrinth, Baire Gauni)
தென்னிந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட புதிர்ப்பாதைச் சின்னம் என்ற பெருமைக்குரியது, அன்றைய ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி வட்டத்தில் சின்ன கொத்தூர் என்று இன்று அழைக்கப்படும் குந்தாணியில்பைரே கவுணிஎன்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகும்.
பைரே கவுணிசின்ன கொத்தூர் () கொத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டம்
தென்னிந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட புதிர்ப்பாதைச் சின்னம் என்ற பெருமைக்குரியது, அன்றைய ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டம் கிருஷ்ணகிரி வட்டத்தில் சின்ன கொத்தூர் என்று இன்று அழைக்கப்படும் குந்தாணியில்பைரே கவுணிஎன்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டதாகும்.
இது ஒற்றை திருக்குமறுக்குப் பாதை கொண்ட வட்டப் புதிர்ப்பாதை வகையைச் சார்ந்ததாகும். இது இயற்கையாகக் கிடைக்கும் கற்குண்டுகளை நிலத்தில் நட்டு அமைக்கப்பட்ட வடிவமாகும். இந்தவகையில், இது பயிற்சி வகை புதிர்ப்பாதைகளில் குறிப்பிடத்தகுந்த ஒன்றாக விளங்குகிறது.
இந்த வட்டப் புதிர்ப்பாதை 8.5 மீட்டர் (28 அடி) விட்டம் கொண்டதாகும். இதன் பாதை சராசரியாக 38 செ.மீ. அகலம் கொண்டுள்ளது. இதன் காலம் துல்லியமாக ஆய்வு செய்யப்படாத நிலையிலேயே உள்ளது. இதன் தொடக்ககாலக் காலக்கணிப்பு, இது பொ.நூ. 13 அல்லது 14- சார்ந்ததாகத் தெரிவிக்கிறது. (Caerdroia - Indian Labyriths).
இதனை ஆய்வு செய்த ழீன்லூயிஸ் போர்ஜியோஸ் (Jean-Louis Bourgeois), இது பெருங் கற்காலக் கல்திட்டை வகை ஈமச்சின்னங்களுக்கு மத்தியில் அமைக்கப்பட்டிருப்பதால், இதன்காலத்தை மு.பொ. 1000 என்று கணிக்கின்றார். தென்னிந்தியாவில், பெருங் கற்கால ஈமச்சின்னங்கள் போன்று தற்காலத்திலும் எழுப்பப்படுவதால், இக்காலக் கணிப்பு ஐயத்துக்கு உரியது என்கிறார் ஹெர்மன் கெர்ன் அவர்கள் (Hermann Kern, Through the Labyrinths, (2000), p.290).
இது இன்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முந்தையது என்ற ழீன்லூயிஸ் போர்ஜியோஸின் காலக்கணிப்பு பல காரணங்களால் ஏற்றுக்கொள்ளத்தக்கது. நீலகிரியில் வாழ்கின்ற பழங்குடிகளான கோத்தர்களிடம் மட்டுமே தற்காலத்திலும் அரிதாகப் பெருங் கற்கால கல்திட்டை போன்ற ஈமச்சின்னங்கள் எழுப்பும் மரபு காணப்படுவதை அறியமுடிகிறது.
ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டப் பகுதிகளோ அல்லது நடுகல் பண்பாடு நிலைபெற்று இருக்கும் வடதமிழகத்தின் பகுதிகளில் கோத்தர் பழங்குடிகளின் தாக்கம் இல்லை என்று துணியலாம். இங்கு குறும்பர்/குருமன்ஸ் பழங்குடிகளே நிறைந்து வாழ்கின்றனர். இவர்களால் நடுகல் பண்பாடு இன்றும் பெரிதும் போற்றப்பட்டு வருகிறது.
தென்னிந்தியாவில் பெருங் கற்காலப் பண்பாடு பொ.. 200 அளவில் முடிவுக்கு வந்தமை நிறுவப்பட்டுள்ளது. பெருங் கற்காலப் பண்பாட்டுக்குப் பிறகு மூத்தோர் நினைவுச் சின்னங்கள் நடுகற்களாக பரிணாம வளர்ச்சி அடைந்ததை சங்க இலக்கியச் சான்று கொண்டும் நிறுவப்பட்டுள்ளது. (இராஜன்.கா, தொல்லியல் நோக்கில் சங்ககாலம், (2004), பக்.8-42). இந்நாள் வரை கிடைக்கப்பெற்ற சான்றுகள் கொண்டு, நடுகல் பண்பாடு மு.பொ.. 400 அளவில் தோற்றம் கொண்டுள்ளது. (இராஜன்.கா. ‘புலிமான்கோம்பை சங்க கால நடுகற்கள்’, ஆவணம், எண்:17 (2006), பக்.1-5). இக்காலகட்டத்தில் வளர்ச்சியுற்ற நடுகல் பண்பாடு, பொ.. 200 அளவில் பெருங் கற்காலப் பண்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்துவிடுகிறது. அதாவது, இக்காலகட்டத்துக்குப் பிறகு பெருங் கற்காலப் பண்பாட்டுக்குரிய கல்வட்டம், கல்திட்டை, கல்பதுக்கை வகை ஈமச்சின்னங்களை எழுப்பும் மரபு நீங்கிவிடுகிறது.
துவக்க கால ஆய்வுகள், மு.பொ.. 500 அளவில்தான் தமிழகத்தில் பெருங் கற்காலப் பண்பாடு துவங்குகிறது எனக் கருதப்பட்டது. இதன் காரணமாக, பெருங் கற்கால நினைவுச் சின்னங்கள், இன்றைய கர்நாடகப் பகுதிகளில் மு.பொ.. 700 தோற்றம் பெற்ற இப்பண்பாடு, தமிழகத்தில் மு.பொ.. 500 அளவில் பரவியதாகக் கருதப்பட்டு வரலாறாக்கப்பட்டது. (பி,நரசிம்மையா). ஆனால் பிற்கால அகழாய்வுகள், மு.பொ.. 1000 முன்னரே தமிழகப் பரப்பில் பெருங் கற்காலப் பண்பாடு நன்கு வேரூன்றி இருந்தமை வெளிப்படுத்தப்பட்டது. இது முன்னர் எழுதப்பட்ட வரலாற்றை திருத்தும் அவசியத்தை வலியுறுத்துகிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பொருந்தல் அகழாய்வு முடிவுகளால், தமிழகத்தில் பெருங் கற்காலப் பண்பாடு மு.பொ.. 1500 அளவிலேயே செழுமையாக நிலைபெற்றிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான காலக் கணிப்பின் பின்னணியில், ழீன்லூயிஸ் போர்ஜியோஸின் காலக் கணிப்பு வலுவானது. ஹெர்மன் கெர்ன் அவர்களின் ஐயம், தமிழக பெருங் கற்காலப் பண்பாட்டு வரலாற்றுப் போக்கின் பின்னணியில் அவசியமற்றதாக உள்ளது.
-Proud to be an Tamilan

No comments:

Post a Comment